Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

தமிழக முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமனம்

தமிழக முழு நேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமனம்

கோவாவைச் சேர்ந்த அர்லேகர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஈடுபட்டு வந்தார்.

பகிரவும் WhatsApp Facebook

கூடுதல் பொறுப்பாக ஆளுநராக செயல்பட்டுவந்த கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழகத்தின் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.


இதேபோன்று, கேரளத்தின் ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூரும், பிரஜ்மோகன் ராம் ஓடிஸாவின் ஆளுநராகவும், கர்நாடக ஆளுநராக சுதா யாதவும், உத்தரகாண்ட் ஆளுநராக தல்சிங் பிஷனும், சிக்கிம் ஆளுநராக துஷ்யந்த் கௌதமும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை குடியரசுத் தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

கோவாவைச் சேர்ந்த அர்லேகர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் ஈடுபட்டு வந்தார். 1989-ல் பாஜகவில் சேர்ந்த இவர், கட்சியின் பொதுச் செயலாளர் என்ற நிலைக்கு உயர்ந்தார். கோவா மாநில சட்டப்பேரவை சபாநாயாகராவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 6 மாதங்களாக பொறுப்பு ஆளுநராக செயல்பட்டு வந்த அர்லேகர் பதவிக்காலத்தில்தான் முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது, அறுதிப்பெரும்பான்மை நிருபித்தால் தான் பதவியேற்க அனுமதிப்பேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அர்லேகர். முந்தைய திமுக ஆட்சியில் சட்டப்பேரவை முதல் நாள் கூட்டத் தொடரில் அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக உரையாற்ற முடியாத சூழல் நிலவி வந்தது. இதனை அர்லேகர் மாற்றி அரசுடன் சுமூக போக்கை கடைபிடித்து வந்த நிலையில், அவர் முழு நேர ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி
டிவிஎஸ் குடும்பத்தில் ரூ.1.80 லட்சம் கோடி சொத்து பங்கீட்டுச் சர்ச்சை
அடுத்த செய்தி
மருந்து விநியோகத்தில் இந்தியா முன்னணி: பிரதமர் மோடி பெருமிதம்

தொடர்புடைய செய்திகள்